×

வெஜிடபுள் தோசை

தேவையானவை

தோசை மாவு – இரண்டு கரண்டி
பெரிய வெங்காயம் – ஒன்று
தக்காளி- ஒன்று
கேரட்- ஒன்று
பீன்ஸ் – பத்து
குடைமிளகாய் – பாதி
நெய் – ஒரு தேக்கரண்டி.

செய்முறை:

கேரட்டை துருவி வைக்கவும். வெங்காயம், தக்காளி, பீன்ஸ், குடைமிளகாயை பொடியாக நறுக்கவும். வாணலியில் நெய் விட்டு எல்லா காயையும் பொன்னிறமாக வதக்கவும். தோசை கல்லில் தோசை மாவை விட்டு, அதன்மேலே வதக்கிய காய்களை சிறிதளவு சேர்த்து சுற்றிலும் நெய் விடவும். தோசை ஒரு புறம் வெந்ததும் திருப்பிப் போட்டு மறுபுறம் வேக வைத்து எடுக்கவும். ஆரோக்கியமான வெஜ் தோசை தயார்.

The post வெஜிடபுள் தோசை appeared first on Dinakaran.

Tags :
× RELATED பருப்பு ரசம்